இணையத்தில் காமத்தினை வளர்க்கும் தெருநாய்களின் முகத்திரையைக் கிழிக்கவே இந்த வலைப்பூவிதழ்!
சென்ற பதிவுகள்
கிடங்கு
தெருநாய்களின் தளங்கள்
காமலோகம்
காமலோகத்தில் இருந்து வந்தவன்!
நண்பர்களுக்கு வணக்கம்... இணையத்தில் தமிழை வளர்க்க நமக்கெல்லாம் பெரும் ஆசை. ஆனால் சிலர் தமிழ் நன்கு தெரிந்திருந்தும், தட்டச்சு செய்யும் அளவுக்கு கணினி அறிவு இருந்தும் இவ்வசதியைத் தவறாகப் பயன்படுத்தி காமத்தினை வளர்க்க பயன்படுத்துகிறார்கள். இது கண்டிக்கப்பட வேண்டிய விசயம். இவ்வாறு செய்வது தவறல்லவா! இந்த உலகில் நாம் வாழும் நாட்கள் மிகவும் குறைவு. இந்த அழகான நாட்களில் சின்னச் சின்ன அழகான தருணங்களில் அந்த பொன்னான நேரத்தினை தாய்மொழியாம் நம் தமிழ்மொழியை வளர்க்க பாடுபடலாம். அதனை விடுத்து காமம் கற்றுக்கொடுக்கும் சில களவாணிப்பயல்களின் முகத்தினை தோலுரிக்கவே இந்த வலைப்பூவிதழ்! உங்கள் மனதில் நீங்கள் சொல்லத் தயங்கிய ஆனால் சொல்லத் துடித்த எல்லாவற்றையும் நான் சொல்ல இருக்கிறேன். தமிழ் உலகில் காமம் இல்லாத தூய தமிழ் வளர்ப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம்! இனிவரும் நாட்களில் ஒவ்வொருவரின் பெயராகக் குறிப்பிட்டு அவர்களின் முகத்தினை உலகுக்கு உணர்த்துவதே எனது கடமை!